வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் (Vedanthangal Bird Sanctuary) சுற்றளவு குறைக்கப்படுதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது இது குறித்து தமிழக வனத்துறை தனது அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
தமிழகத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் இருந்து வருகிறது.சென்னையில் இருந்து சுமார் 65 கீலோ மீட்டர் தூரத்துல் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலத்திற்கு கனடா, சைபீரியா, வங்களாதேசம், பர்மா, ஆஸ்த்திரேலியா முதலிய வெளிநாட்டு பறவைகளும் தங்கள் இனப்பெருக்கத்திற்காக இந்த வேடந்தாங்கல் ஏரியில் தான் கூடுகிறது.
இந்த வேடந்தாங்கல் ஏரிக்கு ஒரே பருவத்தில் மட்டும் 30 வகையான 40 ஆயிரம் வரையிலான பறவைகள் வருவதாக கூறப்படுகிறது.
சுற்றளவு குறைப்பு?
இந்நிலையில், பறவைகள் சரணாலயத்தின் 3 கி.மீ சுற்றளவாகக் குறைக்கபட உள்ளதாகவும் அதனை தனியார் மருந்து ஆலை விரிகாக்கப்பணிகளுக்காக வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஏதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து இது குறித்து தமிழக அரசு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக வனத்துறை விளக்கம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பொதுப்பணித்துறை பாசன ஏரி பரப்பளவான 73.06 ஏக்கா் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
மத்திய வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து சரணாலயங்களையும் மையப்பகுதி, பாதுகாக்கப்பட்டபகுதி , சுற்றுச்சூழல்பகுதி என வகைப்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பொருத்தவரை, 5 கி.மீ. சுற்றளவை முறைப்படுத்த சரணாலயத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவு மையப்பகுதியாகவும், அடுத்த 2 கி.மீ. சுற்றளவு பாதுகாக்கப்பட்டபகுதியாகவும், அடுத்த 2 கி.மீ. சுற்றுச்சூழல்பகுதியாகவும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சரணாலயத்தின் சுற்றளவு குறைக்கப்படாமல், ஏற்கெனவே உள்ள 5 கி.மீ. சுற்றளவு பகுதியாகவே நிா்வகிக்கப்படும். சரணாலயத்தின் சுற்றளவை முறைப்படுத்துவதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், வனப்பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஏதுவாகவும் இருக்கும்.
இந்த நடவடிக்கையால் சரணாலயத்தைச் சுற்றியுள்ள 1 கி.மீ. சுற்றளவில் அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதுடன், மீதமுள்ள 4 கி.மீ. பகுதிகளிலும் வனச் சட்டத்துக்கு உட்பட்டு பணிகள் நடைமுறைப்படுத்தப்படும். அதேவேளையில், சரணாலயத்தைச் சுற்றி விவசாய பணிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க..
குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள்
மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம்
சுற்றளவில் மாற்றம் இல்லை
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதியையும், அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியையும் தனியாா் தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்காக கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். எனவே, தற்போதுள்ள 5.கி.மீ. சுற்றளவில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share your comments