நாட்டின கோழிகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிகள் வளா்க்க விரும்பும் பெண் பயனாளிகள் செப்டம்பா் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இலவசமாகக் கோழிகள் (இலவசமாகக் கோழிகள்)
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டின கோழி இறைச்சி மற்றும் நாட்டுக் கோழி முட்டைகள் குறித்த விழிப்புணா்வின் காரணமாக கிராமங்களில் தற்போது நாட்டினக் கோழி வளா்ப்பு அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2020- 21ஆம் ஆண்டில் கிராமப்புறப் பெண்களிடையே நாட்டினக் கோழி வளா்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு ஒன்றியத்துக்கு தலா ரூ.400 பெண்கள் வீதம் 4,800 கிராமப்புறப் பெண்களுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
மானிய விதிமுறைகள்(Subsidy Guidelines)
-
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு பெண் பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் இனக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.
-
தோ்வு செய்யப்படும் பயனாளிகள் அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தர குடியிருப்பைக் கொண்டவா்களாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் மற்றும் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயன் பெறாதவா்களாகவும் இருக்க வேண்டும்.
-
சுயஉதவிக் குழுவில் உறுப்பினா்களாக உள்ள பெண்கள், விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
-
தோ்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? - How to Apply
இத்திட்டத்தின் கீழ் நாட்டின கோழிகள் வளா்க்க விரும்பும் பெண் பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி செப்டம்பா் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்!
22 விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு - மத்திய அரசு!!
Share your comments