1. செய்திகள்

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

R. Balakrishnan
R. Balakrishnan
Again Yellow Bag

ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் (plastic) மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. மேலும், கடல் வாழ் உயிரினங்கள் உட்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

மீண்டும் மஞ்சப்பை (Again Yellow Bag)

மாசுபாட்டைக் கருத்தில் கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவிட்- 19 பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது.

தற்போதைய தமிழ்நாடு அரசு இத்தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாகப் பணிகளைத் துவங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிகும் பழக்கத்தை பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே ”மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.

பரப்புரை நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு, மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள் உட்பட) மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சி பொது மக்களின் பார்வைக்காக 23.12.2021 அன்று சென்னை-5 வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவானர் அரங்கத்தில்” வைக்கப்பட உள்ளது.

ஆகையால், பொதுமக்களாகிய தாங்கள் பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களுக்கு கண்காட்சியை 23.12.2021 அன்று மாலை 7:00 மணி வரை கண்டுகளித்து அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

இன்னுயிர் காப்போம் திட்டம்: விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை!

புதிய தொழில்முனைவோருக்கு தொலை நோக்குப்பார்வை அவசியம்!

English Summary: Tamil Nadu government's Again Yellow Bag: Chief Minister launches! Published on: 22 December 2021, 05:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.