கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மதிய உணவுத் திட்டம்
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சென்னை மாநகராட்சி அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மதிய உணவுத் திட்டத்தை, தமிழக முதலமைச்சரான காமராஜர் பின்னர் மாநிலம் முழுதும் பரவலாக்கினார்.
தொலைநோக்கு பார்வையும், மனித நேயமும் கொண்ட இந்த மகத்தான திட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மதிய உணவுக்காகவே படிப்பைத் தொடரவும் முன்வந்தனர்.
மத்திய அரசின் பாராட்டைப் பெற்றதோடு, பல மாநிலங்கள் இன்றும் சத்துணவுத் திட்டத்தை பின்பற்ற இந்தத் திட்டம் அடித்தளம் அமைத்தது. பின்னர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் இந்தத் திட்டம் சத்துணவுத்திட்டமாக மாற்றப்பட்டது.
இதனால் சத்துணவுத் திட்டம் உலக நாடுகளுக்கு, இந்தியா, குறிப்பாகத் தமிழக அரசு வழங்கிய கொடை என்றால் அது மிகையாது.
60 லட்சம் மாணவர்கள்
இதன்படி தமிழகம் முழுவதும் இயங்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் வாயிலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் பயிலும் 60 லட்சம் மாணவர்கள் சத்துணவு பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இவர்களுக்கு சத்துணவோடு, வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை, வாழைப்பாம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
ஊரடங்கானது கோடை விடுமுறையோடு சேர்ந்துகொண்டதால், கடந்த 4 மாதங்களாகச் சத்துணவு இன்றி இந்த மாணவர்கள் தவித்து வருகின்றனர். ஊரடங்கு தொடர்வதால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனுடன் உணவுத் தேவையும் சேர்ந்துகொண்டதால் குடும்பங்கள் தடுமாறுகின்றன.
தமிழக அரசு முடிவு
இதனைக் கருத்தில் கொண்டு சத்துணவுக்கான பணத்தை, சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான விபரங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்புமாறு,
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மாணவர்களும், அவர்களது குடும்பங்களும் பயன் பெறும் என நம்பப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களைச் சேகரித்து உடனடியாக அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Elavarase Sivakumar
Krishi Jagran
PMJDY: வங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்!!
தலைநகரை முகாமிட்ட பாலைவன வெட்டுக்கிளிகள்!!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று : முதல்வர் இன்று ஆலோசனை!!
Share your comments