தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 23,2022 அதாவது நாளை, பள்ளி விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிகளில் நிர்வாக குழு அமைக்கப்பட இருப்பதால் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
தொடக்கப் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள, இந்த அறிவிப்பில், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், அதேசமயம் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேர்வினை கருத்தில் கொண்டு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், எப்படி பதிவிறக்கம் செய்வது? (Hall ticket for general examination, how to download?)
பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை, இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடதக்கது.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில், இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய தகவல் மாணவர்களுக்கு, அவர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற ஆதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:
மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு: அரசு வேண்டுகோள்
தமிழகம்: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
Share your comments