தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறு சீரமைப்பு குறித்து உயர்நீதி மன்ற உத்தரவை அடுத்து, மே 27, 2022 ஆட்டோ தொழிற்சங்கங்கள் மற்றும் நூகர்வோர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 ஆக நிர்ணயிக்க வேண்டுமேன தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க தொழிற்சங்கத்தினர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆட்டோ கட்டணம் தொடர்பாக தொழிற்சங்கங்கள், நுகர்வோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் மே 27, 2022 நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் தெரிவித்த கருத்துகள், அறிக்கையாக தயார் செய்யப்பட்டு அரசியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆட்டோக்களின் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 ஆக நிர்ணயிக்க கோரிக்கையை முன்வைத்திருப்பது குறிப்பிடதக்கது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: அமைச்சர் சக்கரபாணி
முன்னதாக கடந்த வாரம் தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுசீரமைப்பது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் சிவக்குமரன் தலைமையில், ஆட்டோ சங்க பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் நலச் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
மேலும் படிக்க: கூட்டுறவு சங்கங்கள், அதிக பயிர் கடன்களை வழங்கும்
ஆட்டோ மீட்டர் கட்டணம் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் தீர்மானிக்கப்பட்டதாகும், அதில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ க்கு ரூ.25 எனவும், அதன் பின் ஒவ்வொரு கிமீக்கு ரூ.12 எனவும் தீர்மானம் செய்யப்பட்டது. தற்போது ஆட்டோ சங்கங்கள் குறைந்தபட்ச தொகையை ரூ.50 எனவும், அதன் பின் ரூ.25 ஒவ்வொரு கி.மீக்கு நிர்ணயிக்க கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஓலா, உபர் போன்ற செயலியை அரசே உருவாக்கி நடத்துவது தான் நிரந்தர தீர்வு எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் படிக்க:
அசத்தலான Peanut Butter ரேசிபி! ட்ரை பண்ணுங்க
குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் வெளியீடு!
Share your comments