1. செய்திகள்

தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது? கர்நாடக முதல்வரின் உத்தரவு!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Megathathu karnataka tamilnadu issue

கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் 9,000 கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்ட அம்மாநில அரசு திட்டம் தீட்டியுள்ளது. பெங்களூரு மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் 4.75 டி.எம்.சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் உள்ளது. மேலும் 400 மெகாவாட் மின் உற்பத்தியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் எதிர்ப்பு(Tamil Nadu farmers protest)

டெல்டா பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் தமிழக விவசாயிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசை அணுகி மேகதாது அணை கட்டும் விவகாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

முதல்வருக்கு எழுதிய கடிதம்( Letter to MK Stalin )

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதிய கடிதத்தில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டாம். இருமாநில மக்களின் நலன் கருதி தண்ணீர் சேமிப்பதற்கு அணை கட்டப்படுகிறது. வறட்சியான காலங்களில் பெரிதும் உதவும் என்று எழுதப்பட்டது.

விரைவில் அனைத்து கட்சி கூட்டம்(All party meeting soon)

இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் மேகதாது அணை கட்டும் விவகாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர், வரும் நாட்களில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நிலம் மற்றும் தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும்  ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம் என்று தெரிவித்தார். இதன்மூலம் மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவ்வாறு நடந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது கடினமாக இருக்கும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

விவசாயிகளின் கணக்கில் ரூ. 2000 ஏன் செலுத்தப்படவில்லை?

வேளாண் பட்ஜெட் நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்: அமைச்சர்

English Summary: Tamil Nadu no longer has water? Order of the Chief Minister of Karnataka!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.