மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் பலன் அடைந்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
புதிய வேலைவாய்ப்பு (New Job Opportunity)
ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் (Subsidy) அளிக்கப்படுகின்றது. இந்த மானியம் ஓய்வூதிய பங்களிப்பில் பணியாளர்களுக்கும், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்றன.
இரண்டாம் இடம் (Second Place)
இதன்படி இ.பி.எப்.ஓ., திட்டத்தில் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதம், நிறுவனத்தின் பங்களிப்பாக 12 சதவீதம் என 24 சதவீதம் இரண்டு ஆண்டு களுக்கு மானியமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் பலன் அடைந்த மாநிலங்கள் குறித்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி நேற்று லோக்சபாவில் கூறியதாவது:
ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தில், 2021 டிச., 4 வரையில் மஹாராஷ்டிராவில் ஆறு லட்சத்து 49 ஆயிரத்து 560 பேர் பலன் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் ஐந்து லட்சத்து 35 ஆயிரத்து 615 பேரும், குஜராத்தில் நான்கு லட்சத்து 44 ஆயிரத்து 741 பேரும் பலன் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 803 நிறுவனங்களின் புதிய ஊழியர்களுக்கு, 300.46 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. பயனடைந்தோரில் மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடம் வகிக்கின்றன.
மேலும் படிக்க
8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம் தரும் LIC-யின் சூப்பரான பாலிசி!
Share your comments