Tamil Nadu Ration Card Holders Attention, Government Announcement
ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட பல புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகள் ஆன பிறகு அதற்கான கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இம்முறையில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடிந்தது. பின் கைரேகை பதிவின் பின்னரே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. காரணம் என்ன?
எனவே, இதில் மோசடிகள் நடக்க வாய்ப்பிருந்ததால், மோசடியை தடுக்க குடும்ப அட்டைதாரர்களே ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க கைரேகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. இம்முறையில் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருப்பவர்களில் யாராவது ஒருவர் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்த பிறகே பொருட்கள் வாங்க முடியும். கைரேகையின் பதிவிக்கு பின்னர், ஸ்கேனர் ஒப்புதல் அளித்த பின்னர், பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த முறையில்தான் அனைத்து ரேஷன் கடைகளில், தற்போது பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை கார்டுதாரர்களுக்கு விரைந்து வழங்க, கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தற்போது, மீண்டும் பழைய முறையான ரேஷன் கார்டை, 'ஸ்கேன்' செய்து, பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. கைரேகை பதிவு நிறுத்தப்பட்டதால், பிற மாநில கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையடுத்து, மீண்டும், 'ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க வேண்டும்' என்ற அரசின் பழைய உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இனி பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும், கைரேகை பதிவு செய்து தான் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளதால், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இனி வழக்கம் போல, ரேஷன் பொருட்களை வாங்கலாம் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Republic Day Sale: Amazon Sale-இல் iQOO Z5 5G விலை நிலவரம், உள்ளே!
வறட்சி மற்றும் நீர் நிலைகளை சமாளிக்க திட்டங்கள் தயார், ரூ.494 கோடி ஒப்புதல்
Share your comments