தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வினை கடந்த சில ஆண்டுகளாக நடைமுறை படுத்தி உள்ளது. அதன் படி இத்தேர்வானது வரும் ஜூன் 8 மற்றும் 9 (வார இறுதி) தேதிகளில் நடை பெற உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வினை அரசு நடத்துகிறது.டெட் (TET) எனப்படும் இந்த தகுதி தேர்வானது ஒன்றாம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிற்றிவிக்கும் ஆசிரியர்களுக்கானது.
இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான அறிவுப்பு கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிடப்பட்டு, விண்ணப்பங்களை மார்ச் 15 ஆம் தேதி முதல் இணையத்தளத்தில் வெளியிடபட்டது.
தேர்வு விண்ணப்பங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில் இன்று நுழைவு சீட்டு மற்றும் தேர்வு நடைபெறும் நாள் போன்ற அறிவிப்புகள் வெளியானது. மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டுகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு 2019
இந்த ஆண்டிற்கான நுழைவு தேர்வு வரும் ஜூன் மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ளது. இரண்டு தாள்களாக நடை பெறும் இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறுகிறது.
தாள் 1
இந்த தேர்வானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கானது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி இரண்டாண்டு பயின்றவர்கள் மற்றும் பி எட் பயின்றவர்கள் இந்த தேர்வினை எழுதுவார்கள்.
தாள் 2
இந்த தேர்வானது 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பயிற்றுவிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கானது. இதில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி இரண்டாண்டு முடித்தவர்கள் மற்றும் பி எட் பயின்றவர்கள் இந்த தேர்வை எழுதுவார்கள்.
இலவச கல்வி மற்றும் கட்டாய கல்விக்கான என்ற சட்டவிதியின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எடுக்கும் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பற்றிய விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ http://www.trb.tn.nic.in/TET_2019/msg2.htm என்ற இணைய பக்கத்தை பார்க்கவும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments