தமிழகத்தில் அக்னி வெயில் முடித்து ஒரு வாரம் முடிந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. பெரும்பாலான இடங்களில் கடும் வெயிலினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் தமிழகத்தில் வெகு சில பள்ளிகளும், புதுவையில் பெரும்பாலான பள்ளிகளும் விடுமுறையினை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது.
இன்றைய வானிலை
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, முஞ்சிறை, புதுக்கடை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகின்றது.
மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சில மாவட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு கோவை மற்றும் அதனை சுற்று உள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூற பட்டுள்ளது.
கடற்சீற்றம்
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. . ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, திருத்தலைக்காடு , புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் போன்ற மீனவ கிராமங்கள் இதில் அடங்கும். எனவே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளன.
சென்னை வானிலை
மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாள் முழுவதும் மேக மூட்டத்துடன் காணப்படும். மிக அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை தாமதம்
இந்திய பெருங்கடலில் நிலவி வரும் சாதகமற்ற சூழ்நிலையினால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜூன் 10-ம் தேதிக்கு பிறகு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Anitha Jegadeesan
krishi Jagran
Share your comments