1. செய்திகள்

சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

KJ Staff
KJ Staff

சித்திரை மாதம்  என்றாலே தமிழ் புத்தாண்டு மற்றும் பிரத்யேகரமான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருமிதமான திருவிழா. வருடா வருடம் மீனாட்சி அம்மன் சிவ  பெருமானின் இந்த தெய்வீக திருக்கல்யாணம் பெரிய கொண்டாட்டத்துடன் மதுரை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தெய்வீகத்திருவிழாவை பார்க்க உலகெங்கிலிருந்தும் மக்கள் திரண்டு வருவர்.  உலகெங்கிலும் ஸ்ரீசுந்தரேஸ்வரர் (சிவபெருமான்) மீனாட்சி அம்மன் (பார்வதி தேவி)  இருவரின்  திருக்கல்யாணம் புகழ்பெற்ற திருவிழாவாகும். இத்திருக்கல்யாணத்தை கண்டு மக்கள் இறை அருள் பெற்று மனம் நிறைவாக வழிபட்டு செல்வர்.

முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கி  பின் திருவிழாவின் முக்கிய  நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பின்  மூன்றாவது நாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். தங்கையின் கல்யாணத்தை பார்க்க முடியாமல் கோபித்துக்கொண்டு வைகை ஆற்றில் விஷ்ணு பரமாத்மா இறங்கும் நிகழ்வே திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இதில் அழகர் தங்க ரத குதிரையில் அமர்ந்தவாறு காண்போர் கண்களுக்கு  தெய்வம் நேரிலே வந்ததுபோல ஒரு புத்துணர்ச்சியும் நன்மையையும் அளிக்கக்கூடிய வகையில் அமைகிறது. இத்தகைய இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொள்ள உலகில் உள்ள அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் திரண்டு வருவார். 

பெருமாளை கும்பிடும் சமயத்தார் இடையையும் சிவபெருமானை கும்பிடுவோர் இடையையும்   இருவரின் சமயப்பிரச்சனை பெரும் அளவில் இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திருமலை நாயக்கர் காலத்திலேயே  இரண்டு விழாக்களையும் ஒரே திருவிழாவாக அமைத்தனர். இதனால் அணைத்து மக்களும் ஒன்று கூடி இத்திருவிழாவை பெரும் கொண்டாட்டத்துடன் நடத்தி வருகின்றன.  இன்றைக்கு இத்திருவிழா மதுரை நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து வருகிறது. 

English Summary: TAMIL SITHIRAI THIRUVIZHA MEENAKSHI SUNDARESWARAR THIRUKALYANAM Published on: 15 April 2019, 11:38 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.