1. செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Pongal
Credit : TimesOfIndia

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தலா 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தலா 2,500 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 80 லட்சம் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கி, துவக்கி வைத்தார்கள்.

கொரோனாவில் சிக்கிய உலகம்

தமிழர்களின் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை, டெல்டா பகுதிகளிலே புயலினால் கடுமையான மழை, அங்கே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை, புயலால், கன மழையால் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை ஆகிய இரண்டும் இந்த ஆண்டை பாதித்திருக்கிறது.

பொங்கல் பரிசாக ரூ.2500/-

இதையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு, தைப் பொங்கலை தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை தமிழர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2,500/- வழங்கப்படும். 2021-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும். அத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு நல்ல துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 19.12.2020 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்கள்.

அதன்படி, தைப் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், குடும்பம் ஒன்றிற்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பை 9 அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்கள்.

பொங்கலையொட்டி தயார் நிலையில் கரும்புகள்! உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!

ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கீடு

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 5,604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேட்டி சேலை திட்டம்

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கிடும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

மேலும் படிக்க...

100% மானியத்தில் செயல்படும் கால்நடை திட்டங்கள் - நீங்களும் பயன்பெறலாம்!!

விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை!

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் உறுதி!

English Summary: Tamilnadu chief minister edapadi palaniswami Launches and Distribution Of Pongal Gift Hamper And Rs.2500 Cash Incentive scheme for upcoming ponga festival Published on: 22 December 2020, 09:35 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.