1. செய்திகள்

லாரி வாடகை 30% அதிகரிப்பு: காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

டீசல் விலை உயர்வு காரணமாக லாரிகளுக்கான வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானவங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,

  • லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்துதல்.

  • 'டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்.

  • பழைய வாகனங்கள் அழிப்பு 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்' உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது, லாரி வாடகையும் சேர்த்து தான் பொருட்களில் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே லாரி வாடகை உயரும் போது காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

எனவே இனி காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரத்து அதிகரித்தாலும் லாரி வாடகை அதிகரிப்பு காரணமாக விலை குறைய வாய்ப்பு இல்லை, மேலும் பல பொருட்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 14 லட்சம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பே பார்சல் லாரிகளின் வாடகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

காப்பீட்டு விதியில் திருத்தம்! காப்பீடு தொடர்பான புகார்களை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்!

பயிர்களில் மகசூலை அதிகரிக்க களை மேலாண்மை அவசியம்!

English Summary: Tamilnadu Lorry owners association increased the rental price of lorry upto 30 percent, essential commodities May go up Published on: 05 March 2021, 07:31 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.