1. செய்திகள்

தமிழகம்: குறைந்த வாடகையில் இயங்கும் டிராக்டர்கள் சேவை- துவக்கி வைத்தார் முதல்வர்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamilnadu: The Chief Minister launched the low-rent tractors service

விசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வேளாண் கருவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 4, தலைமைச் செயலகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் ஆகியவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக, ரோட்ட வேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்து கலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

2021-22 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை நிதி நிலை அறிக்கையில் 'விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைக் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தினை, நடப்பாண்டில் மேலும் வலுப்படுத்தவும், 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்துக் கலப்பைகள், 1
கேஜ் வீல்கள், நவீன் முறையில் பூச்சி மருந்துகள் தெளிக்க ட்ரோன்கள் ஆகியவை 23 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, விவசாயிகள் உழவுப் பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ரூ.22.89 கோடி மதீப்பீட்டில் 185 டிராக்டர்கள், நிலங்களில் உள்ள அப்புறப்படுத்தப்பட வேண்டிய செடி மற்றும் இதர புல் பூண்டுகளை பற்பல துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்து நிலத்திற்கேற்ற உரமாக்கும், இவ்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

வேளாண் செய்திகள்: Crop Insurance முக்கிய அறிவிப்பு| பண்ணை அமைக்க ரூ.1லட்சம் வரை மானியம்!

தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்

English Summary: Tamilnadu: The Chief Minister launched the low-rent tractors service Published on: 05 August 2022, 05:00 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.