2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்யப் படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தூய்மையான, பாதுகாப்பான தண்ணீர் விநியோகம் பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம் என்பதால் தொடர் பரிசோதனை இன்றியமையாததாக உள்ளது.
எனவே 2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு இருப்பதைஉறுதி செய்வதை ஜல்சக்தி அமைச்சகத்தின் (Water Resources Ministry) ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.
தண்ணீர் பரிசோதனைக்கான அவசியத்தை கருத்தில் கொண்டு, நவீன நடமாடும் தண்ணீர் பரிசோதனை ஆய்வகம் (Mobile Water lab)என்னும் புதுமையான முயற்சியை ஹரியானா அரசு மேற்கொண்டுள்ளது.
தண்ணீர் பரிசோதனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த நவீன நடமாடும் தண்ணீர் பரிசோதனை ஆய்வகத்தில் ஜிபிஎஸ் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து போதுமான அளவிலும், பரிந்துரைக்கப்பட்ட தரத்திலும் குடி தண்ணீரை உறுதியாக வழங்குவதற்கு ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் கொய்யா-வீடுதோறும் வளர்க்க வேண்டிய மரம்!
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு அடிக்கிறது அதிஷ்டம் - தீபாவளி போனஸாக வருகிறது 8.5 % வட்டி!
Share your comments