நடப்பாண்டு தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் உளுந்து 140 மெ.டன், பச்சை பயிறு 160 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு (Target) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டின் சென்ற ராபி பருவத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பயிறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum resource price) கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பச்சை பயறு, உளுந்து கொள்முதல்
உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.57 வீதமும், பச்சை பயிறு (Green lentils) கிலோவுக்கு ரூ.70.50 வீதமும் கொள்முதல் செய்யப்படடது. இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர். இதன் மூலம் சந்தை விலை (Market price) உயர்ந்ததால் அனைத்து பயிறு வகைகளின் மூலம், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைத்தது. இதேபோல் நடப்பு 2020-21ம் ஆண்டு ராபி பருவத்தில் மீண்டும் பயிறு வகைகள் சாகுபடி (Cultivation) செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து, பச்சை பயிறு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுபாட்டில் இயங்கும் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக உளுந்து 140 மெ.டன் மற்றும் பச்சை பயிறு 160 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அழைப்பு:
நன்கு காய வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோவுக்கு ரூ.60 வீதமும், பச்சை பயிறு கிலோவுக்கு ரூ.71.96 வீதமும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் (Bank account) நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சை பயிறு ஆகிய விளைப்பொருட்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை (Aadhar card), வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து, பச்சைபயிறு ஆகிய விளைப்பொருட்களை விற்பனை செய்து பயன்பெற மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் (Govindha Rao) கேட்டுக் கொண்டுள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments