தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென செய்யப்பட்டுள்ள மாற்றம் குடிமகன்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மது உடல்நலத்திற்கு கேடு என்றபோதிலும், தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே முன்னெடுத்து நடத்திவருகிறது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் எவ்வளவுதான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், வருமானத்தைக் காரணம் காட்டி விற்பனையை அரசு தொடர்கிறது. நீதிமன்றங்கள் எவ்வளவுதான் சவுக்கடி கொடுத்தாலும், மதுவிற்பனைக்கு தடையில்லை.
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடையை நடத்தவேண்டும் எனக் குடிமகன்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதுதான் உச்சக்கட்ட ஆச்சர்யம்.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது.
ரூ.10 உயர்வு
கடந்த 2 ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய விலைஉயர்வுப்படி, குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 உயர்ந்துள்ளது. பீர் பாட்டிலின் விலையும் அதிகரித்துள்ளது.
ரூ.2000 கோடி
மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாயாக கூடுதலாக சுமார் ரூ.2000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், டாஸ்மாக் மதுபான விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
200 ஆடுகள், 2500 கிலோ பிரியாணி- சுடச்சுட பிரியாணிப் பிரசாதம்!
Share your comments