ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து அரசு ஊழியர்களும் வருடத்தில் 15 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுக்காமல், அந்த நாட்களில் பணிக்கு செய்து ரொக்க ஊதியம் பெறுவது வழக்கமாகும்.
தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1993 இன் விதி 7A இன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, அனைத்து அரசு ஊழியர்களும் மற்றும் ஆசியர்களும் ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்களுக்கு சம்பாதித்த விடுப்பை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
தற்போதைய விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள், தங்கள் ஈட்டிய விடுப்பில் சரணடைந்து பணத்தைப் பெறலாம்.
அரசு உத்தரவின்படி, கோவிட் -19 தொற்றுநோயால் எழும் நிதி அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வசதியை அரசு இடைநிறுத்தியுள்ளது.
கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகள் காரணமாக நிதி நெருக்கடியை நிர்வகிக்க, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, கோவிட் -19 தோற்று அரசு நிதிகளை பாதித்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை அரசிற்கு 7,000 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்க உதவும்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி முதல் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பணியாளர்கள், UGC மற்றும் AICTE ஊதிய விகிதங்களால் நிர்வகிக்கப்படும் பணியாளர்களுக்கு, இந்த முடிவு பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது.
புதிய உத்தரவு ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள், அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள நூலகர்கள், சிறப்பு பட்டயப் படிப்புகள், கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர், உதவியாளர்கள் மற்றும் பிறருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது.
இதையடுத்து, தற்போது கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறும் நடைமுறையை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளதை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறை தனி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க:
தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!
சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஊதிய உயர்வு- ஆசிரியர்கள் அதிர்ச்சி!
Share your comments