தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டம் அடுத்த ஆண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ரூ. 31.50 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 54.82 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் காணி பழங்குடியின மக்களுக்கு, தனிநபர் பட்டா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ராதாபுரத்தில் விளையாட்டு பயிற்சி மையம், மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா, நெல்லையில் மேற்கு புறவழிச்சாலை திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் திட்டங்கள், இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 2009ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட தாமிரபரணி நம்பியாறு, கருமேனியாறு திட்டம், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டதாகவும், தற்போது அந்த திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் படிக்க:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி, குடும்ப அட்டைதாரர்களே உஷார்
Share your comments