கேரளாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது உத்ரா கொலை சம்பவம் தான்.
கொடூரமாகக் கொலை (Brutal murder)
குறையுள்ள மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவளது சொத்தை மறுமணம் செய்துகொண்டு அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, மனைவியை பாம்பை கடிக்க வைத்து கணவன் கொடூரமாகக் கொலை செய்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
கேரளாவில் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த ரப்பர் எஸ்டேட் உரிமையாளர் விஜயசேனன். உடல் ரீதியாக சற்று குறைபாடுள்ள தனது ஒரே மகள் உத்ராவை அரூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் சூரஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.
மறுமணம் செய்யத்திட்டம் (Remarriage plan)
சூரஜ்- உத்ரா தம்பதியின் திருமண வாழ்வின் அடையாளமாக ஒரு மகன் பிறந்திருக்கிறான். இருப்பினும், மனைவியின் குறையை விரும்பாத சூரஜ், அவளைக் கொன்றுவிட்டு, மறுமணம் செய்துகொண்டு சொகுசு வாழ்கை வாழ ஆசைப்பட்டிருக்கிறார்.
அதேசமயம் உத்ராவின் சொத்துகள், தன்னை விட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, தடயமே இல்லாமல் அவளைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்.
உத்ரா பலி (Utra dead)
கடந்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி, தனது வீட்டில் வைத்து இரவு நேரம் பாம்பை விட்டு உத்ராவை கடிக்க வைத்திருக்கிறார். இந்த விஷயம் சூரஜின் பெற்றோருக்கு தெரியாது. இதனால் அவர்கள் உத்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டனர். இதற்குப் பிறகு அஞ்சலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு உத்ரா சென்றுவிட்டார். அப்போதும் வெறி அடங்காத சூரஜ் அங்கே சென்று மீண்டும் கோப்ரா பாம்பை ஏவிவிட்டு கடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இந்த முறை உத்ரா உயிரிழந்தார்.
தொடர்ந்து பாம்பு கடித்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சூரஜ் போலிஸிலில் புகார் அளிக்க, போலிஸாரின் கவனிப்பு தாங்க முடியாமல், அப்ருவராக மாறினார் சூரஜ்.
நாளைத் தீர்ப்பு (Judgement day)
கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், சுமார் 1,000 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கொலையைத் திட்டமிட்டு சூரஜ் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விபரத்தை நாளை அறிவிக்கிறது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை கேரளா மட்டுமேல்ல, இந்தியாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
மேலும் படிக்க...
Share your comments