விவசாய சங்க பிரதிநிகளுடன், மத்திய அரசு, இன்று(டிசம்பர் 30) ஆறாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதையடுத்து, இன்று நடக்கவிருந்த டிராக்டர் பேரணியை (Tractor rally) விவசாய சங்கத்தினர் நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்
விவசாயிகள் போராட்டம்:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு (Agriculture Laws) எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 'இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு (Minimum resource price) சட்ட உத்தரவாதத்தை தருவது குறித்தும் தான் பேச்சு நடத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு, விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு
விவசாயிகள போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனினும், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளும், தோல்வியில் முடிந்தன. ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை, இன்று நடக்கிறது. இதன் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த டிராக்டர் பேரணியை, விவசாய சங்கத்தினர் (Agricultural Associations) ஒத்திவைத்துள்ளனர். விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும், 'சம்யுக்த் கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha) என்ற அமைப்பு, டில்லி - ஹரியானா இடையில் உள்ள சிங்கு மற்றும் டிக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து, குண்டலி - மனேசர் - பால்வல் நெடுஞ்சாலை வரை, இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. மத்திய அரசுடன் இன்று ஆறாம் கட்ட பேச்சு நடக்க உள்ளதால், அதை கருத்தில் வைத்து, டிராக்டர் பேரணி, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (Amit Shah), மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) சந்தித்து பேசினார்.
Share your comments