பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மெகா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. மாநில கட்சியான லோக் ஜனசக்தி தனித்து களம் காண்கிறது. இருப்பினும், பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.
விவசாயக்கடன் தள்ளுபடி
இந்த நிலையில், எதிர்வரவுள்ள தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் சக்திசின் கோகில், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் மூத்த தலைவர்கள் வெளியிட்டனர். அதில், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சார கட்டண தள்ளுபடி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை நிராகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே உள்ள ஓய்வூதிய திட்டங்கள் தவிர, முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.800 கவுரவ ஓய்வூதியம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
லோக் ஜனசக்தி தேர்தல் அறிக்கை
அதேபோல், லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்ச்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் சிராக் பஸ்வான் வெளியிட்டுள்ளார். பிஹார் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு அம்சங்கள் லோக் ஜனசக்தி தேர்தல் அறிக்கையில் இருப்பதாக சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கரில் இயற்கை தோட்டம் !!
குழாய் கிணறு, துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!
Share your comments