அழுத்தம் ஊட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட நாட்டின் முதல் டீசல் டிராக்டரை (Diesel Tractor) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) இன்று அறிமுகப்படுத்த இருக்கிறார். விவசாயிகளின் வருமானத்தை (Farmers Income) உயர்த்தும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த டீசல் டிராக்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த டிராக்டரைப் பயன்படுத்தினால், விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 1 இலட்சம் வரை மிச்சமாகும்.
விவசாயிகளின் வருமானம் உயரும்
ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் (Rawmat Techno Solutions) மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா (Tomaceto Ackl India) ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த மாற்றம், செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை (Income) உயர்த்த உதவுவதோடு, ஊரக இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் (employment) அதிகரிக்கும். மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar), பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
1 இலட்சம் சேமிப்பு:
டீசல் டிராக்டரை (Diesel Tractor) பயன்படுத்துவதன் மூலம், வருடத்திற்கு ரூ 1 லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளால் சேமிக்க முடியும் என்பதால், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். இந்த டிராக்டர் நடைமுறைக்கு வந்த பின்பு, விவசாய வேலைகள் கால் தாமதமின்றி மிக எளிதில் முடியும். இந்த டிராக்டர் அனைத்து விவசாயிகளுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வந்துவிட்டது பறக்கும் விமான கருவி
Share your comments