1. செய்திகள்

விவசாயி கடன் அட்டைகள் மீது ரூ.1.76 லட்சம் கோடிக்கு கடன் அனுமதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
1.76 lakh crore loan on farmer credit cards

Credit : Business Standard

18 கோடியே 70 லட்சம் விவசாயி கடன் அட்டைகளுக்கு ( Kisan credit Card) ரூ 1.76 லட்சம் கோடி கடன் அனுமதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயி கடன் அட்டைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் 2020 பிப்ரவரி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி தற்போது ரூ 1.76 லட்சம் கோடி கடன் அனுமதி உடன் கூடிய 18 கோடியே 70 லட்சம் விவசாயி கடன் அட்டைகளுக்கு 2021 ஜனவரி 29 வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தகவல் (Information in Parliament)

இத்தகவலை பொதுத் துறை வங்கிகளும், நபார்டும் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

சிறப்பம்சங்கள் (Features of Kisan Credit Card)

 • இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் பெற எந்தவித அடமானமும் தேவையில்லை.

 • KCC- மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடனை குறைந்த வட்டியில் பெற முடியும். முறையாக தவணை செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

 • கடன் அட்டையின் மூலம் கடன் பெற்றுள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யப்படும்

 • கடன் அட்டை கணக்கில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணத்திற்கு கூடுதல் வட்டியும் வழங்கப்படும்.

தகுதி (Qualification)

 • விண்ணப்பதாரர் விவசாயத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும்.

 • 18 வயது முதல் 75வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

 • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் துணை விண்ணப்பதாரர் கட்டாயம் அவசியம்.

 • மற்றவரின் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாய நபர் கூட இந்த கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணவங்கள்  (Documents)

 • முழுமையாக நிரப்பப்பட்ட கிசான் கடன் அட்டைக்கான (KCC) விண்ணப்ப படிவம்

 • ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆதாரம்.

 • நில ஆவணங்கள்.

 • இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

 • வங்கிகள் கோரும் பிற ஆவணங்கள்.

மேலும் படிக்க....

மரவள்ளி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள் தாயரிப்பு! - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- 40,000 இடங்களில் ஆய்வு!

நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்வு - சிக்கலில் விவசாயிகள்!

English Summary: 1.76 lakh crore loan on farmer credit cards

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.