ஆம்புலன்ஸ் வராததால், பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை, இளைஞர் ஒருவர், தள்ளுவண்டியில், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம், மனதை உருக்குவதாக அமைந்தது.
அப்படி, பாடுபடுட்டு, தங்கள்கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்த சுகாதார மையத்திற்கு அழைத்துச்சென்ற நிலையில், அங்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ இல்லாதது சோதனையின் உச்சக்கட்டம். இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள், விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
வராத ஆம்புலன்ஸ்
மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் ரானே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்ப்பதற்காக '108' ஆம்புலன்சுக்கு கணவர் போன் செய்தார். ஆனால் 2 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை.
மருத்துவர் இல்லை
இதனால் வேறு வழியில்லாமல் தவித்த அவர், தனது மனைவியை தள்ளுவண்டியில் கிடத்தி அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றார். அவரது கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்த அந்த மையத்தில் மருத்துவரோ, செவிலியர்களோ இல்லை. பின்னர் அரசு ஆம்புலன்ஸ் ஒன்றில் அங்கிருந்து ஹட்டாவுக்கு தனது மனைவியை அழைத்து சென்றார். அங்குள்ள மருத்துவமனையிலும் சரியான சிகிச்சை கிடைக்காததால், பின்னர் தமோ மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார். அங்கு அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
வைரல்
இதற்கிடையே கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த மாவட்ட சுகாதார அதிகாரிகள், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments