தருமபுரியில் உள்ளது. கோட்டூர் மலை கிராம் மூந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்த மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்..அடிப்படை வசதி இல்லாததே இதற்கு காரணம். இந்தியா விடுதலை பெற்று இத்தன்னை ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தராததால் இவ்முடிவு எடுத்ததாக அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள்.
அவல நிலை
இங்கு முறையான சாலை வசதி இல்லை. அடிப்படை வசதிகளான மருத்துவமனை, பள்ளிகள், சுகாதார வசதிகள், முறையான குடிநீர் என்பன போன்றவையாகும். முறையான சாலை வசதி இல்லாததால் பல நேரங்களில் நோயாளிகள் வழியினில் இறந்துவிடும் அவல நிலை இங்கு உள்ளது.
மக்கள் கூறும் போது, " நாங்கள் பல தேர்தலை பார்த்துவிட்டோம், பல ஆட்சிகளை பார்த்துவிட்டோம், ஆனால் எங்கள் வாழ்க்கை தரம் மட்டும் மாறவில்லை".மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்க படவில்லை என்பது பிரதான காரணமாக உள்ளது. மேலும் அவர்கள் இந்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
மாவட்ட ஆட்சியர் பதில்
மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறுகையில் "அந்தப் பகுதியில் உள்ள மலை கிராம மக்களிடம் மலையை விட்டு இறங்கி வாருங்கள். அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்று கூறினோம்" . ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டார்கள். மேலும் அவர் கூறுகையில், வனப்பகுதியாகவும், மலைப்பகுதியாகவும், இருப்பதால் சாலை வசதிகள் செய்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் 6.7 கிலோமீட்டர் அளவில் சாலை அமைக்க அரசு அனுமதித்துள்ளது. இதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றார். கோட்டூர்மலையை சேர்ந்த மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். தொடர்ந்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றார்.
News Source: BBC Tamil
Share your comments