முக கவசம் அணிவதன் அவசியத்தை, எமதர்மன் உணர்த்துவது போன்ற வாசகம் அடங்கிய பேனர், மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
கொரோனா தொற்றை தவிர்க்க, முக கவசம் (Mask) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
முக கவசம் (Face Mask)
சுகாதாரத்துறையினர், போக்குவரத்து போலீசார், தன்னார்வ அமைப்பினர் மூலம், முக கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், எமதர்மனை மையப்படுத்தி, அச்சிடப்பட்டுள்ள பேனர், மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
'பூலோகம் சென்று வரும் எமதர்ம ராஜன், சித்ர குப்தரிடம்,''அங்கு எல்லோரும் ஒரு வகை கவசம் அணிந்து இருப்பதால் அடையாளம் காண முடியாமல் போய்விட்டது. ஆதலால், முகத்தில் கவசம் அணியாதோர் சிலரை தான் இங்கு என்னால் கொண்டு வர முடிந்தது' என்பது போன்ற வாசகம் தாங்கிய பேனர் அச்சடிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு (Awareness)
'எமலோகத்தில் இடமில்லை; தயவு செய்து, அவசியமின்றி வீட்டை விட்டு யாரும், வெளியே வர வேண்டாம்,' என எமதர்ம ராஜா சொல்வது போன்ற பேனர் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பேனரை, ஆட்டோ டிரைவர் சிராஜ், தனது ஆட்டோவில் மாட்டி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் படிக்க
டெல்டா மற்றும் ஒமைக்ரானை எதிர்க்கிறது உளாநாட்டுத் தயாரிப்பான கோவாக்சின்!
Share your comments