பழைய ஓய்வூதிய திட்டம் அண்மைக்காலமாக பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் வலுயுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுமா என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
2003ஆம் ஆண்டு வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் நீக்கப்பட்டு தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் வழங்கப்பட்ட ஏராளமான சலுகைகள் போய்விட்டதால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. எனினும், மத்திய அரசு இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்கள் குறித்தும், மத்திய அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த திட்டம் இருக்கிறதா எனவும் நாடாளுமன்றத்தில் அசாதுதீன் ஓவைஸி எம்.பி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசு ஊழியர்களுக்கு தொடங்கப்போவதாக அறிவித்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் தேசிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள நிதியை வழங்குமாறு பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்திடம் (PFRDA) கேட்டுள்ளன. ஆனால், சட்டப்படி அந்த நிதியை திருப்பி தர முடியாது என ஆணையம் தெரிவித்துவிட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: அகவிலைப்படி நிலுவைத்தொகை விரைவில் வரப்போகுது!
கரும்பு விவசாயத்தில் கால்தடம் பதித்த போர் விமான தயாரிப்பு பொறியாளர்!
Share your comments