பல வார இடைவெளிக்குப் பிறகு நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. கோயம்பேட்டில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது அது குறித்த தகவல்கள் பின்வருமாறு,
தக்காளி சாகுபடி அதிகரிப்பு
தக்காளி சாகுபடி அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் தக்காளி விலை படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத வகையில் காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்தது. அதிலும் அன்றாட சமையல்களில் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலையானது கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயைத் தாண்டி அதிர்ச்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு விலை உயரத் தொடங்கியபோது, ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியைத் தேர்ந்தெடுத்தனர் (அறுவடைக்குத் தயாரான நிலையை அடைய சுமார் 70 நாட்கள் ஆகும்) இதன் விளைவாக, சந்தைகளுக்கு வரத்து தற்போது திடீரென அதிகரித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு சந்தை நிலவரம்
தற்போது இந்த நிலையில், இன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ரூ.10 விலைகுறைந்து தக்காளி ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றையதினம் ரூ.100-க்கு விற்க்கப்பட்ட தக்காளி இன்று ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது இல்லத்தரசிகளையும் சாமானியர்களுக்கு அளித்துள்ளது. தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
- தக்காளி கிலோ- ரூ.90
- வெங்காயம்- ரூ.22
- உருளை- ரூ.33
- சின்ன வெங்காயம்- ரூ.80
- ஊட்டி கேரட்- ரூ.60
- பீன்ஸ் ரூ.50
- ஊட்டி பீட்ரூட் ரூ.40
- வெண்டைக்காய் ரூ.30
மேலும் படிக்க
முட்டை அதிரடி விலை உயர்வு! கதறவிடும் கறிக்கோழி விலை!
508 ரெயில் நிலையங்கள் சீரமைப்பு! தமிழகத்தில் மற்றும் 18! எந்தெந்த ரயில் நிலையங்கள் தெரியுமா??
Share your comments