1.தக்காளி விலை கடும் வீழ்ச்சி
சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து, தினசரி சுமார் ஆயிரத்து 100 டன் தக்காளி வருவது வழக்கம். இந்நிலையில், தக்காளி தற்போது கூடுதலாக, ஆயிரத்து 400 டன் முதல் ஆயிரத்து 500 டன்கள் வந்துள்ளன.
தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் கடுமையாக சரிந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை கிலோ 6 ரூபாயாக மேலும் சரியக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.பழைய மீட்டர்களை விவசாய மாற்று குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டம்
மீட்டர் பதிக்காமல் எந்தப் பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும், ஏற்கனவே இணைப்பு வழங்கப்பட்டிருந்தால் உடனடியாக மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பலமுறை அறிவுறுத்தி வருகிறது. மீதமுள்ள இணைப்புகள் அளவிடப்படவில்லை. ஆனால் இனிமேல், இலவச மின்சாரத்தை ஒவ்வொரு மாதமும் துல்லியமாகக் கணக்கிட்டு, மானியத் தொகையை மட்டும் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு மீட்டர் பொருத்த இன்னும் 30 லட்சம் மீட்டர் தேவைப்படுகிறது. அதற்கான தொகை மின் வாரியத்திடம் இல்லை. எனவே, வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடப்பதால், அங்குள்ள பழைய மீட்டர்களை விவசாய மாற்று குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
3.அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளை பொருட்கள் 22 லட்சத்திற்கு மேல் ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதற்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் விவசாய விளைபொருட்களை கொண்டு வந்திருந்தனர்.
பருத்தி 885 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 709-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 99-க்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து 96 ஆயிரத்து 143-க்கு விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் 4 ஆயிரத்து 237 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இது (கிலோ) குறைந்தபட்சமாக 17 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்சமாக 22 ரூபாய் 25 காசுக்கும் என மொத்தம் 56 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கொப்பரை தேங்காய் 58 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 439-க்கும், அதிகபட்சம் ரூ.8 ஆயிரத்து 229-க்கும் என மொத்தம் ரூ.1லட்சத்து 59 ஆயிரத்து 896-க்கு விற்பனை செய்யப்பட்டது. எள் 29 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.14 ஆயிரத்து 589-க்கும், அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 369-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாய விளைபொருட்கள் ரூ.22 லட்சத்து 78 ஆயிரத்து 194-க்கு விற்பனை செய்யப்பட்டது.
4.120 ருபாய் தங்கம் விலை சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5.4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
6.நாளை முதல் கோடை விடுமுறை
பள்ளிகளில் நாளை (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Share your comments