1. செய்திகள்

கோயம்பேடு-இல் தாறுமாறாக அதிகரித்திருக்கும் காய்கறி விலை! என்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya
The price of vegetables has increased paradoxically in Koyambedu! What?

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருவது வழக்கமாகும்.

கடந்த மாதம் வரை தினசரி 480-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து குவிந்தது குறிப்பிடதக்கது. இதன் காரணமாக பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இந் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இன்று 360 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்காக வந்துள்ளன.

வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 2 மடங்காக அதிகரித்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் கத்தரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து உள்ளது.

வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும், அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்கப்படுவது குறிப்பிடதக்கது.

இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விவரம் கீழ் வருமாறு (கிலோவில்):-

  • தக்காளி-ரூ.35,
  • நாசிக் வெங்காயம்-ரூ.22,
  • ஆந்திரா வெங்காயம்-ரூ.12,
  • சின்ன வெங்காயம்-ரூ.45,
  • கத்தரிக்காய்-ரூ.25,
  • வரி கத்தரிக்காய்-ரூ.15,
  • அவரைக்காய்-ரூ.60,
  • பச்சை பட்டாணி-ரூ.150,
  • வெண்டைக்காய்-ரூ.20,
  • பீட்ரூட்-ரூ.30,
  • முட்டை கோஸ்-ரூ.8,
  • முருங்கைக்காய்-ரூ60,
  • சவ் சவ்-ரூ.20,
  • முள்ளங்கி-ரூ.35,
  • சுரைக்காய்-ரூ.15,
  • கோவக்காய்-ரூ.25,
  • பாகற்காய்-ரூ.30,
  • புடலங்காய்-ரூ.15,
  • கொத்தவரங்காய்-ரூ.35,
  • காலி பிளவர் ஒன்று-ரூ.25,
  • பீர்க்கங்காய்-ரூ.35.

மேலும் படிக்க:

புதிதாக "கால்நடை மருத்துவர்" செயலி: இனி உடனடி தகவல் பெறுங்கள்

TNAU: சிறுதானியங்கள் வைத்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!

English Summary: The price of vegetables has increased paradoxically in Koyambedu! What? Published on: 13 September 2022, 04:59 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.