மழை காலத்தில் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்க உதவிய இரு மாடுகளுக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மூன்று வேளை உணவு (Food for 3 times)
சென்னை மணலி செட்டிமேடு கொசப்பூர் வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புழல் ஏரி வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு அப்பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. அதற்கு மாட்டு வண்டி பயன்படுத்தப்பட்டது.
நன்றிக்கடன்
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மழை வெள்ள பாதிப்புகளில் நிவாரணம் வழங்க உதவிய செட்டிமேடு பகுதியைச் சேர்ந்த இரு வண்டி மாடுகளுக்கு பொதுமக்கள் இணைந்து நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக மாடுகளுக்கு மஞ்சள் பூசி குங்குமமிட்டு அலங்கரித்தனர். பின் பூசணிக்காய் தேங்காய் எலுமிச்சை பழத்தால் திருஷ்டி சுற்றி போடப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வாழைப்பழம் கரும்பு உள்ளிட்டவற்றை மாடுகளுக்கு வழங்கி தங்கள் நன்றிக்கடனை செலுத்தினர்.
மேலும் படிக்க
Share your comments