1. செய்திகள்

ரிசர்வ் வங்கிக்கு எச்சரிக்கை விடுத்த உலக வங்கி: காரணம் இது தான்!

R. Balakrishnan
R. Balakrishnan
World Bank warned the Reserve Bank

உலகம் முழுவதும் உள்ள பல மத்திய வங்கிகள் பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஒரே நேரத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், அடுத்த ஆண்டு உலகளாவிய மந்தநிலை ஏற்படும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி (Reserve Bank)

வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் நிதி நெருக்கடிகள் தொடரும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இது குறித்து உலக வங்கி ஒரு அறிக்கையில் கூறுகையில் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கடந்த ஐந்து தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இது அடுத்த ஆண்டிலும் தொடரும் என்று கூறியுள்ளது.

உலக வங்கியின் அறிக்கை மேலும் குறிப்பிடுவது என்னவென்றால் தற்போது எதிர்பார்க்கப்படும் வட்டி விகித அதிகரிப்பு மற்றும் பிற கொள்கை நடவடிக்கைகள் உலகளாவிய பணவீக்கத்தை தொற்றுநோய்க்கு முன் காணப்பட்ட நிலைக்கு கொண்டு வர போதுமானதாக இருக்காது. முதலீட்டாளர்கள், மத்திய வங்கிகள் 2023 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய பணவியல்-கொள்கை விகிதங்களை கிட்டத்தட்ட 4% ஆக உயர்த்தும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது அவர்களின் 2021 சராசரியை விட 2 சதவீத புள்ளிகளுக்கு மேல் அதிகரிக்கும்
விநியோக இடையூறுகள் மற்றும் தொழிலாளர்-சந்தை அழுத்தங்கள் குறையாவிட்டால், அந்த வட்டி-விகித அதிகரிப்புகள் உலகளாவிய முக்கிய பணவீக்க விகிதத்தை 2023 இல் சுமார் 5% ஆக உயரக்கூடும் என்றும் உலக வங்கி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

அதே சமயம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை கூடுதலாக 2 சதவீத புள்ளிகளால் உயர்த்த வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளது. இது குறித்து உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில் உலகளாவிய வளர்ச்சி கடுமையாக குறைந்து வருவதாகவும், மேலும் பல நாடுகள் மந்தநிலையில் விழுவதால் மேலும் அதன் பொருளாதார நிலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

அரசு பணியாளர்களுக்கு ஜாக்பாட்: நவராத்திரியில் அகவிலைப்படி உயர்வு!

ஓய்வு பெற்ற பிறகு ரூ.50,000 பென்சன்: இந்த பென்சன் திட்டத்தை பாருங்க!

English Summary: The World Bank warned the Reserve Bank: This is the reason! Published on: 18 September 2022, 07:01 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.