உலகின் மிக நீளமான தாவரத்தை ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த தாவரம் புத்தம் புதிய மரபணுவை கொண்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரத்தின் வடக்கில் 800 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஷார்க் பே என்ற கடற்கரை. இந்த கடற்கரையில் தான் ஆராய்ச்சியாளர்கள் இந்த தாவரத்தை கண்டறிந்துள்ளனர். இந்த தாவரம் புல் இனத்தை சேர்ந்ததாகவும் கடலில் பறந்துவிரிந்தும் காணப்படுகின்றது.
நீளமான தாவரம் (Longest Plant)
கடல் புல் தாவரத்திற்கு ‘பொசிடோனியா ஆஸ்ட்ராலிஸ்’ (Posidonia australis) என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த கடல் புல் தாவரம் ‘ஷார்க் பே’ (shark bay) கடற்கரையில் 180 கி.மீ தூரத்திற்குப் பரவியுள்ளது. முதலில் இப்படி ஒரு தாவரம் இருக்கிறது என்பதை எதிர்ப்பாரா விதமாக கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், எப்படி இவ்வளவு நீளமாக உள்ளது என்பதைக் கண்டறிய, இந்த தாவரத்தின் மரபணுவை எடுத்து ஆராய்ச்சி செய்ததில்தான் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 180 கி.மீ. உள்ள இந்த கடல் புல் தாவரம் ஒரே விதையில் இருந்து உருவானது என்றும், இந்த ஒரே தாவரம் தன்னை நகல்களாக மாற்றிக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடல் புல் தாவரம் (Sea grass plant)
இதன் காரணமாக, உலகிலேயே மிக நீளமான தாவிரமாக இந்தக் கடல் புல் தாவரம் மாறியுள்ளது. இந்தத் தாவரமானது வெப்பம், உப்புத்தன்மை, வெளிச்சம் என அனைத்து விதமான சூழல்களிலும் வளரக் கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடல் புல் தாவரமானது, ஒரு ஆண்டுக்கு 35 செ.மீ. நீளம் வரை வளரக் கூடியது ஆகும். இந்த தாவரம், இப்போது உள்ள இந்த நீளத்திற்கு வளர சுமார் 4,500 ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கடல் புல் தாவரமானது அமெரிக்காவின் சான்டியாகோ முதல் லாஸ் ஏஞ்செல்ஸ் வரை உள்ள தூரத்திற்கு பரவியுள்ளது என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
நம் மண்ணில் விளைகிறது பெங்களூரு தக்காளி!
எலுமிச்சையில் நுண்ணூட்ட மேலாண்மை: மகசூலை அதிகரிக்கும் நுடபம்!
Share your comments