தமிழகம் முழுவதும் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிப்பு (Damage by corona)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்ததால், ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். லட்சக்கணக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் நீட்டிப்பு (More extension)
இந்தநிலையில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து (செப்டம்பர் 6-ந்தேதி வரை) தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏறக்குறைய 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தூய்மைப் பணிகள் (Cleaning tasks)
50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை யொட்டி, தியேட்டர்களில் இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இன்று தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன.
பூங்காக்கள், கடற்கரைகள் (Parks, Beaches)
இதேபோன்று பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல்குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி நேற்று முழுவதும் மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடந்தன.
இதுவரை கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடற்கரைகள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புகின்றன. முதல் நாளில் கடற்கரை மணலில் கால் பதிக்க பொதுமக்களும் தயாராக உள்ளனர்.
கடைகள் (Shops)
ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ஏதுவாக, பல சலுகைகளை அறிவித்து, வியாபாரத்தையும் அதிகரிக்க வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு மகிழ்ச்சி (Delight for the public)
4 மாத காலத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூங்காக்கள், கடற்கரைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பரவல் 1 சதவீதமாய் குறைந்தது!
இரு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்பு குறைகிறது: ஆய்வில் தகவல்!
Share your comments