ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என ஒன்றிய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே ஆகிய துறைகளின் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே ஆகிய துறைகளின் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமையன்று நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் குளோபல் பிசினஸ் உச்சிமாநாடு 2023 ல் பங்கேற்றார். மாநாட்டில் பங்கேற்ற பின் தன் துறைச்சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
இந்தியா இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு பெரிய தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக வளர்ந்துவிடும் என ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உள்நாட்டு 4G/5G தொழில்நுட்ப செயல்பாடுகளில் இந்தியா தனது திறமையை நிரூபித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
5G சேவைகள் அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கப்பட்டது. மேலும் 100 நாட்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா தனது சொந்த 4G மற்றும் 5G தொழில்நுட்ப அடுக்கை மேம்படுத்துவதில் எடுத்த விரைவான முன்னேற்றங்கள் உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில் உலகின் முக்கிய தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக இந்தியாவைக் காண்போம் என ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரயில்வே துறை குறித்தான கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்தார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
ரயில்வேயினை பொறுத்தவரை, பயணிகளின் அனுபவத்தை மாற்றியமைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது, நவீன மற்றும் எதிர்கால வடிவமைப்பு திட்டங்களுடன் ரயில் நிலையங்கள் மற்றும் டெர்மினல்களை (புது டெல்லி, அகமதாபாத், கான்பூர், ஜெய்ப்பூர் உள்ளிட்டவை) மறுவடிவமைப்பு செய்வது என்பது குறித்து விளக்கினார்.
புதிய நகர்ப்புற இடங்கள், டெர்மினல்கள் உருவாக்கும் போது அவை பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் அமைக்கப்பட்டும் என குறிப்பிட்டார்.வந்தே பாரத் ரயில், உள்நாட்டு ரயில் பாதுகாப்பு அமைப்பு கவாச் மற்றும் புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றம் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.
ரயில் தளவாடங்களை அதிகரிக்க தனியார் சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக நடைப்பெற்ற கடந்தகால பேச்சுவார்த்தைகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ரயில்வேயினை தனியார்மயமாக்கும் எந்த திட்டமும் இல்லை" என்று அமைச்சர் திட்டவட்டமாக கூறினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 4,500 கி.மீ புதிய நெட்வொர்க்கை சேர்க்கிறோம் எனவும், இது சராசரி ஒரு நாளைக்கு 12 கி.மீ புதிய பாதை அமைப்பதாகவும் ரயில்வே இயங்கி வருகிறது. இதுவே, இந்தியாவில் சரக்குகளை பரிமாற்றம் செய்ய போதுமானது எனவும் குறிப்பிட்டார். 1.35 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் 8 பில்லியன் மக்கள் ரயில்வேயில் பயணிக்கின்றனர்.
கடந்த 50-60 ஆண்டுகளில் ரயில்வே தொடர்ந்து சந்தைமதிப்பினை இழந்து வந்தாலும், தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. 27 சதவீதமாக இருந்த சந்தைப்பங்கு கடந்த ஆண்டு 28 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இந்த ஆண்டு 29-29.5 சதவீதத்தை நெருங்கி வருவதாகவும், இன்னும் 2-3 ஆண்டுகளில் ரயில்வே 35 சதவீத சந்தை பங்கை நோக்கிச்செல்லும் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
மாவட்ட விவசாயிகள் அதிகளவு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்-தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி
ரைத்தரிசி திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை - கர்நாடக பட்ஜெட்
Share your comments