திருப்பரங்குன்றம் பகுதி நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இருந்தும் சாகுபடி பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். சமீபத்திய தொடர்மழையால் திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் இப்பகுதி விவசாயிகள் இன்னும் சாகுபடி பணிகளை தொடங்கவில்லை.
நட்டம் (Loss)
விவசாயி சிவராமன் கூறுகையில், ''மானாவாரி பகுதியான தென்பழஞ்சி பகுதி கிராமங்களில் தண்ணீர் இருந்தால் மட்டுமே ஆண்டுதோறும் ஆடி 18 இல் நெல் நாற்றுப் பாவுதல், காய்கறிகள் விதை நடவு செய்வோம். இந்த ஆண்டு சமீபத்திய மழையால் கண்மாய், கிணறுகள், ஆழ்குழாய்களில் போதிய தண்ணீர் உள்ளது. இருப்பினும் விளைபொருள்களுக்கு போதுமான விலை கிடைக்காமல் ஆண்டுதோறும் நட்டம் அடைகிறோம்.
இந்தாண்டு உழவு, வரப்பு வெட்டுதல், பரம்பு அடிப்பது, நடவுக்கு கூலி உயர்ந்துவிட்டது. அறுவடை இயந்திர வாடகை, உரம் மற்றும் இடுபொருள்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் நெல் மற்றும் விளை பொருள்களின் விலை உயரவில்லை. ஆண்டுக்காண்டு நட்டம் அதிகரிக்கிறது.
இதுவே விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்க தயங்குவதற்கான காரணம். மற்ற பொருள்களுக்கு நிரந்தரமான விலை நிர்ணயம் செய்யப்படுவது போல், விளை பொருட்களுக்கும் அரசு நிரந்தர விலையை நிர்ணயம் செய்தால் தான் விவசாயிகள் லாபம் பெற முடியும். தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபடவும் செய்வர், என்றார்.
மேலும் படிக்க
தென்னைக்கு பயிர் காப்பீடு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்: கால்நடை மருத்துவர் அறிவுரை!
Share your comments