கொரோனா அரக்கனிடம் இருந்து நம் உரைக் காப்பாற்றிக்கொள்ள ஏதுவாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கைக்குப் பிறகும், தடுப்பூசி போட சிலர் முன்வராததால், அத்தகையோர், பொதுஇடங்களில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா (Covid19)
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்திலும் கோராத்தாண்டாவம் ஆடியது.
அதிவேகக் கொரோனாப் பரவலின் காரணமாக பல தொழில்கள் முடங்கின. இந்தத் தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நாடும், பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதிரடிச் சட்டம் (Act of Action)
அந்தவகையில் கொரோனாவைத் தடுக்க முக்கியமானக் கருவியாக செயல்படுவது தடுப்பூசி தான். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பலரும் தடுப்பூசியினை செலுத்திவிட்டனர்.இருப்பினும் சிலர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளவில்லை. இதையடுத்துத் தமிழக அரசு அதிரடியான சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
சட்டத்தின் சாராம்சம் (The essence of the law)
அதாவது கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கத் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே பொது வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும். என்றும், தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கக்கூடாது. இந்த உத்தரவு குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை இயக்குனர்கள் மற்றும் சென்னை மாநகர சுகாதார அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கொரோனா தொற்று பெருந்தொற்றாக, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இந்த பெருந்தொற்றைத் தடுக்க தொற்றுநோய்கள் சட்டம் 1897-ன் படி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கியது.
கிருமி நாசினி (Disinfectant)
அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள் சரியாக முக கவசம் அணிந்து உள்ளார்களா?, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா?, கிருமி நாசினிகளைக் கொண்டுக் கைகளை சுத்தம் செய்கிறார்களா?, என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களின் நலனைக் காக்கும் பொருட்டு அவர்களின் சுகாதாரத்தை காக்க, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி உள்ளூர் அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடமாடத் தடை (Prohibition of movement)
மேலும் இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாமல் இருக்க தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை பொதுவெளியில் நடமாட அனுமதிக்கக் கூடாது.
அனுமதி இல்லை (Not allowed)
இந்த சட்டத்தின்படி தெருக்கள், பொழுதுபோக்கு இடங்கள், மார்க்கெட்டுகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது இடம், பொதுக்கூட்டம் நடக்கும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், உணவகம் போன்றவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை.
கண்காணிப்பு அவசியம் (Monitoring is essential)
இந்த சட்டத்தைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த பொது சுகாதாரத் துறை அதிகாரிக்கு முழு உரிமையும் உள்ளது. மேலும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திவிட்டனரா ? என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!
Share your comments