1. செய்திகள்

நெருங்கும் பொங்கல் பண்டிகை : களைகட்டும் கரும்பு விற்பனை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
credit : Daily thanthi

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் வியாபாரிகளும், அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை விவசாயி ஒருவர் தனது வயலிலேயே ஒரு கரும்பின் விலை ரூ.20 என பேனர் வைத்து அசத்தி உள்ளார்.

பொங்கல் பண்டிகையில் கரும்பு

தமிழர் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக பார்க்கப்படுவது பொங்கல் திருநாள். இந்நாளில் விவசாயிகள் புத்தாடை அணிந்து புது அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பொங்கல் பண்டிகையில் எப்போதுமே கரும்புக்கு ஒரு முக்கிய பங்குண்டு, எனவே தான் விவசாயிகள் பலரும் கரும்பினை பயிரிட்டு அதனை அரசுக்கும், வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!

கரும்பு விளைச்சல் வீழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கரும்பு சுமார் 500 முதல் 700 ஏக்கர் வரை பயிரிடப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகை காலங்களில் கரும்பு விற்பனை மந்தமாக காணப்பட்டது இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதானல் பெரும்பாலான விவசாயிகள் இந்த ஆண்டு சாகுபடி பரப்பளவு குறைந்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பெய்த கனமழையால் சாகுபடி செய்த கரும்புகள் சாய்ந்து பாதிப்புக்குள்ளானது.

கொள்முதல் விலை எதிர்பார்ப்பு

பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்களே உள்ள நிலையில் தற்போது விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்வதற்காக கரும்பு வியாபாரிகளும் மும்முரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.11 என கொள்முதல் செய்யப்பட நிலையில், இந்த ஆண்டு ஒரு கரும்புக்கு ரூ.15-க்கு மேல் கொள்முதல் செய்யப்படும் என கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வேளாண் துறை சார்பில் கால்நடை முகாம்! கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு

பொங்கல் தொகுப்பில் கரும்பு

இந்நிலையில், தமிழ்நாடு அரசும் பொங்கல் தொகுப்பில் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால், கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் மிகுந்தி எதிர்பார்ப்பில் உள்ளனர். கரும்பு விற்பனைக்காக வியாபாரிகளும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க கூட்டுறவு சங்க அதிகாரிகளும் கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனால், ஒரு கரும்பு விலை 15 ரூபாக்கும் கீழ் கேட்பதால் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

வியாபாரிகளான விவசாயிகள்

இதனிடையே, அரசையும், வியாபாரிகளையும் எதிராபாராமல் கரும்பு விவசாயி ஒருவர் அவரே தன் கரும்புகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். தஞ்சை வரவு கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி தனது வயலில் கரும்பு விற்பனைக்கு தொடர்பாக ஒரு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதில் ஒரு கரும்பு விலை ரூ.20 என அச்சிட்டுள்ளார். பொதுமக்கள் பலரும் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து அந்த கரும்பு விவசாயி கூறியதாவது, கரும்பு சாகுபடிக்காக அதிகம் செலவளித்துள்ளதாகவும், 15க்கும் குறைவான ரூபாயில் கொள்முதல் செய்தால் கட்டுப்படியாகது என தெரிவித்தார். மேலும், விளைச்சல் குறைவு என்பதால் பண்டிகை நெருங்க நெருங்க கரும்பில் விலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வளர்ப்புக்கு தடைசெய்யப்பட ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்! குழிதோண்டி புதைத்த அதிகாரிகள்!

English Summary: This Pongal, sugarcane cost might go up as the yield has dropped compared to the last year Published on: 30 December 2020, 03:45 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.