புதிய தொழில் தொடங்கும் ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழகத்தில் 75,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை (Industry policy) விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரண்டு தொழில் கொள்கைகளையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edappadi Palanisamy) வெளியிடவுள்ளார்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் புதிய தொழில் துவங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorandums of Understanding) நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு (Employment) கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கெனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை நாளை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்.
புதிய ஒப்பந்தங்கள் மூலம் மொத்தமாக, சுமார் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு (Employment) கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 4 சிப்காட் (Sipcot) மற்றும் 6 டிட்கோ தொழிற் பேட்டைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார். கொரோனா (Corona) பாதிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலையின்மைப் (Unemployment) பிரச்சினை நிலவும் சூழலில் இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
Krishi Jagran
ரா.வ.பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
வீடு தேடி பணம் வர வேண்டுமா? SBI-யின் சூப்பர் பிளான்! உடனே பதிவு செய்யுங்கள்!
Share your comments