1. செய்திகள்

திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit: Zee news

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 நாட்களுக்கு மழை 

அடுத்த 48 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்
அடுத்த 72 (07.11.2020) மணி நேரத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாராபுரம் (திருப்பூர்) 17 செ.மீ, பிளவக்கல் (விருதுநகர்) 16செ.மீ, மூலனுர் (திருப்பூர்) 13செ.மீ, ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 12செ.மீ, உசிலம்பட்டி (மதுரை) 11செ.மீ, வத்திராயிருப்பு (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 9செ.மீ, ஆலந்தூர் (சென்னை) 8செ.மீ, ராஜபாளையம் (விருதுநகர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), எட்டயபுரம் (தூத்துக்குடி) , போடிநாய்க்கனுர் (தேனி) தலா 7செ.மீ பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க...

சோளப் பயிர்களை தாக்கும் பச்சை வண்ண வெட்டுக்கிளிகள்! - திண்டுக்கல் விவசாயிகள் கவலை!

ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!

வெங்காய விலை எப்போது குறையும்? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!

English Summary: Tirunelveli, Kanyakumari, Ramanathapuram, Thoothukudi districts are likely to receive heavy to very heavy thundershowers during the next 24 hours Says Imd chennai

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.