விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் இலகுரக மோட்டர் பம்பு செட்டுகளை 70% மானியத்தில் அமைத்து தர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், சூரிய சக்தியால் (சோலார்) இயங்கும்மோட்டார் பம்ப் செட்டுகள்அமைக்க ஆதிதிராவிட மற்றும்பழங்குடியின விவசாயிகளுக்கு 13 பம்பு செட்டுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சோலார் பம்பு செட் - 70% மானியம்
இத்திட்டத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு 5 குதிரைசக்தி (எச்.பி.) திறன் கொண்ட சோலார் பம்ப் செட் அமைக்க அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 42303, 7.5 குதிரைசக்தி கொண்ட சோலார் பம்ப்செட் அமைக்க ரூ.3 லட்சத்து 67525, 10 குதிரைசக்தி கொண்ட சோலார் பம்ப் செட் அமைக்க ரூ.4 லட்சத்து 39629 செலவாகும். இதில், 70 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.
நிபந்தனைகள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் சூரியசக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கும் போது, நுண்ணீர் பாசன அமைப்புடன் (சொட்டுநீர் பாசனம்) இணைக்க உறுதிமொழி அளிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
சோலார் பம்புசெட் அமைக்க விரும்பும் விவசாயிகள் திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தாராபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், உடுமலையிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன் பெறலாம்" என்று மாவட்ட ஆட்சியர் அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
தமிழக தென் மாவட்டங்களில் பயிர் சேதங்கள் கணக்கெடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!
வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!
வைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு! நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச Wi-Fi வசதி! டெல்லி முதல்வர் அசத்தல்!
Share your comments