எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ, 'ஒவ்வொருவரும் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் (APJ Abdulkalam) விருப்பம். அவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் உருவாக்கப்பட்டது. மரம் விவசாயிகளுக்கு சொந்தம்; சுத்தமான காற்று மக்களுக்கு சொந்தம், என்ற கோஷத்துடன், 2015ல் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கியது. ஆறு கட்டமாக, 551 இடங்களில், 2,282 ஏக்கர் பரப்பில் பசுமை வனம் (Forest) உருவாக்கப்பட்டுள்ளன.
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடியிடம் முதல்வர் வேண்டுகோள்!
வனத்துக்குள் திருப்பூர் திட்டம்
ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்து, 50 ஆயிரம் மரக்கன்றுகள் (Saplings) நட்டு முடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தனியார் அமைப்பு, நேர்த்தியான திட்டமிடல் மூலம், 87 சதவீத கன்றுகளை மரமாக வளர்த்தெடுத்துள்ளது. திட்டப்பணிகள், கோவை, சித்தார்த் பவுண்டேஷன் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட செயல்வடிவம், ஆவணமாக்கப்பட்டுள்ளது. வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டம் நிறைவு விழா, 7வது திட்டத்துக்கான நர்சரி துவக்க விழா, சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை வெளியீட்டு விழா, 27ம் தேதி நடக்கிறது. திருப்பூர், பல்லடம் ரோடு, ஸ்ரீவேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் (Kirubakaran), வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் சுந்தரேசன், ஓசை அமைப்பு நிறுவனர் காளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சேலம் தலைவாசலில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்காவின் சிறப்பம்சங்கள்!
உதவிய தன்னார்வ அமைப்புகள்
கொரோனா ஊரடங்கிலும் (Corona lockdown), பசுமைப்பணி தடையின்றி தொடர்ந்தது. மாவட்டத்தின் பசுமை பரப்பை விஸ்தரிக்க, கொடையாளர் தாராளமாக வழங்கியதும், தன்னார்வலர் தன்னலம் பாராமல் களமாடியதுமே, இத்திட்டம் வெற்றிபெற காரணம். 'வெற்றி' அமைப்பின் பசுமை பாதையை பின்பற்றி, காங்கயம் துளிகள், வெள்ளகோவில் நிழல்கள், உடுமலை 'மலை உடுமலை', சேனாதிபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம், திருப்பூர் வேர்கள், 'டிரீம் 20' (Dream 20) - பசுமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், பசுமை வளர்க்க பயணித்து கொண்டிருக்கின்றன. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள் (Butterfly), 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது. எங்களது பசுமை பயணம் தொடரும் என்று வெற்றி அமைப்பு நிர்வாகிகள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments