தமிழகத்தில் நடைப்பெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சாதனை புரிந்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய ஒரேயொரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த நபரும் தேர்ச்சி பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தேர்வெழுதிய 8,03,385 மாணக்கர்களில் தேர்ச்சிப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7,55,451 (94.03%). இதில் மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என தான் தேர்வெழுதிய அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார். இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், படிப்பு மட்டுமே எனது சொத்து என்று நினைத்த படித்து காரணத்தால் தான் இந்த அளவிற்கு தன்னால் மதிப்பெண் எடுக்க முடிந்தது என தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் CA படிக்க விரும்புவாதகவும் தனது ஆசையினை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயாவின் தேர்ச்சியினையும் சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை ஸ்ரேயா மட்டுமே. இவர் தமிழில் 62, ஆங்கிலத்தில் 56. பொருளியல் பாடத்தில் 48, வணிகவியலில் 54. கணிதத்தில் 58, கணினி அறிவியலில் 59 என மொத்தம் 337 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுக்குறித்து திருநங்கை ஸ்ரேயா கூறுகையில், நான் இந்த பள்ளியில் மூன்றாம் இனத்தை சார்ந்தவராக சக நண்பர்கள், ஆசிரியர்கள் யாரும் பார்க்கவில்லை. அனைவரையும் போலவே என்னையும் ஒரு மாணவராக பார்த்தார்கள். என் போன்ற திருநங்கைகள் கல்வியில் தங்களது முழு கவனத்தை செலுத்தி வாழ்வில் முன்னேற முயல வேண்டும் என குறிப்பிட்டார்.
தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்கல்வியில் சேர- 14417 எண்ணிற்கு அழைத்தால் உயர்கல்வி வழிகாட்டிக் குழு உதவி செய்யும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு நடைப்பெற உள்ளது. சுமார் 47,934 (5.97%) பேர் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
TN 12th Result 2023- துணைத்தேர்வு எப்போது? மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்
Share your comments