ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க தீர்மானம் செய்யப்படும்.
கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8,03,924 லட்சம் குடும்பங்களுக்கு வரவிருக்கும் 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழி வகுக்கப்படும்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் சுத்தமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்டம் மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் அனைத்தும் அடுத்த ஒரு வருடத்தில் முழுமையாக மின் மயமாக்கப்படும்.
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்படும்.
400 கோடி ரூபாய் செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல் படுத்தப்படும், 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவைகளும் வழங்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டில் முதல் ஒரு தொகுதிக்கு மூன்று கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும்.
1200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட உள்ளது.
நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் 5,500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உள்ளிட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
ஒவ்வொரு நகரத்திலும் நீர் சமநிலை திட்டங்கள் தயாரிக்கப்படும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் துவங்கப்படும்.
மேலும் படிக்க:
Share your comments