
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே நல்ல மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்தாலும் கூட ஆங்காங்கே மழை தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக் காலம் வினோதமாகவே இருந்தது. கோடைக் காலம் தொடங்குவதற்குள் முடிந்துவிட்டது என்பதே உண்மை. வழக்கமாக மே மாதம் தான் தமிழகத்தில் வெப்பம் உச்சத்தைத் தொடும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பம் குறைவாகவே இருந்தது.
தமிழ்நாடு வானிலை சொல்லப் போனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டியது. சென்னையில் கூட பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழை பெய்திருந்தது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவுக்கே வானிலை நிலவியது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை இருந்தது. 14 மாவட்டங்களில் மழை இருக்கு ஆனால், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவு கணிசமாகக் குறைந்து வந்தது.
இதனால் மெல்ல வெப்பம் சற்று உயர்ந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அதிகரித்த வெப்பத்தைக் குறைக்க உதவும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லையில் மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை எச்சரிக்கையால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
நாளை (04-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்றார். வெப்பத்தைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Share your comments