1. செய்திகள்

2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு- அமைச்சர் சொன்ன தகவல்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TN School Reopen date again Postponement- new date details here

சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதியானது மேலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதியினை பள்ளிகல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால விடுமுறை முடிந்து புதிய வகுப்புகள் வருகிற ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்ப்பாராத வகையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகின்றன.

இந்த வெப்பநிலையானது இன்னும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் மற்றும் தன்னார்வ வானிலை கணிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியினை ஒரு சில நாட்கள் தள்ளி வைக்க அனைத்து தரப்பிலிருந்தும் அரசுக்கும் கோரிக்கை எழுந்து வந்தது.

இதைத் தொடர்ந்து சென்னை, தலைமைச் செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனையின் நிறைவாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் திறப்பது எப்போதும் வழக்கம். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதன்பின் தமிழகத்தில் நீடித்த வெயிலின் காரணமாக ஜூன் 7 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் வெயிலால் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போயுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறக்கப்படும் என்கிற நிலை இருந்த போது அதற்கான முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நகரில் நிலவும் வெயிலுக்கு ஏற்ப தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

ஜூன் மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

English Summary: TN School Reopen date again Postponement- new date details here Published on: 05 June 2023, 12:33 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.