1. செய்திகள்

செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!

Daisy Rose Mary
Daisy Rose Mary
School
Credit : Edexlive

நீண்ட பொதுமுடக்கத்திற்குப் பிறகு ஒருவழியாக தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியது. இதையொட்டி நேற்று பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள்

கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது. இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் இணையதளதம் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன.

பள்ளிகளை திறக்க எதிர்ப்பு

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்தது.

பள்ளிகளை திறக்க பெற்றோர் ஒப்புதல்

அதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கடந்த 6, 7, 8ம் தேதிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொங்கள் பண்டிகை விடுமுறைக்கும் பின்னர் 19-ந்தேதி (இன்று) முதல் பள்ளிக்கூடங்களை திறப்பது என தமிழக அரசு முடிவு எடுத்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு

இதற்கிடையே பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், முன் ஏற்பாடுகள் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகின. அந்த வழிமுறைகளை பின்பற்றும் விதமாக அந்தந்த பள்ளிகள் சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நடிவடிக்கை

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முதல் 2 நாட்கள் வகுப்புகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுத் தேர்வை அச்சமின்றி எழுதுவது தொடர்பான ஆலோசனைகளும், அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: TN Schools would reopen today, Directorate of Public Health has issued SOPs and mandated screening of all students/ teachers in a week's time. Published on: 19 January 2021, 12:28 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.