தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), கோயம்புத்தூரில், வேளாண் பூச்சியியல் துறையில் ஒவ்வொரு மாதமும் "தேனீ வளர்ப்பு" குறித்த ஒரு நாள் பயிற்சி நடப்பது வழக்கமாகும்.
அதே போல், இம்மாதமும், 2022 செப்டம்பர் மாதத்திற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. தேதி, நேரம், கட்டணம் குறித்த விவரங்களை இப்பதிவு விளக்குகிறது.
06.09.2022 (செவ்வாய்கிழமை) அன்று இப்பயிற்சி வழங்கப்படும்.
- தேனீ வளர்ப்பின் பல்வேறு அத்தியாவசிய அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது, அந்த வகையில்:
- தேனீ இனங்களை அடையாளம் காணுதல் மற்றும் தேனீக்களின் சமூக அமைப்பு
- இந்திய தேனீக்களை பெட்டிகளில் வளர்ப்பது, பொது மற்றும் பருவ மேலாண்மை
- தேனீ தீவனம், குறுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களின் மகசூல் அதிகரிப்பு
- தேன் பிரித்தெடுத்தல்
- தேனீக்களின் எதிரிகள் மற்றும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை
போன்ற தகவல்களை இப்பயிற்சி அளித்திடும்.
ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என பூச்சியியல் துறை, TNAU, கோவை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனை மறவாதீர்கள்,
- அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
- பயிற்சிக் கட்டணம்: ரூ.590/- (ரூபாய் ஐந்நூற்று தொண்ணூறு மட்டும்) பயிற்சி அன்று செலுத்தினால் போதும்.
- பயிற்சி நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
- மேலும் விவரங்களுக்கு, பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641 003. தொலைபேசி: 0422-6611214;
மின்னஞ்சல்: entomology@tnau.ac.in
மேலும் படிக்க:
தமிழகம்: டெல்டாவில் நெல், வாழைகள் நீரில் மூழ்கி நாசம்!
நெல்லுக்கான தமிழ்நாடு அரசு MSP அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி
Share your comments